பாடல்/சந்தம்:
தான தானன தானன தானன தானனா
தான தானன தானன தானன தானனா
தானன தனத்தன தனத்தன தனன்நா
தானன தனத்தன தனத்தன தனன்நா
தானன தனத்தன தனத்தன தனன்நா
தானன தனத்தன தனத்தன தனன்நா
தான தானன தானன தானன தானனா
தான தானன தானன தானன தானனா
தானன தனத்தன தனத்தன தனன்நா
தானன தனத்தன தனத்தன தனன்நா
தானன தனத்தன தனத்தன தனன்நா
தானன தனத்தன தனத்தன தனன்நா
எங்கள் முயற்சி
ஜீவ ஆற்றலைப் பூதத்தில் பூட்டிய மாயனே
பூமி போல்பல கோடிகள் ஆக்கிடும் சேயனே!
வானமும் பரந்தது விரிந்தது எதன் ஆல்
பூமியும் வளைந்தது சுருண்டது எதன் மேல்
காற்றது சலிக்குது திரட்டுது எவர் ஆல்
தீயது ஒளிர்வது எரிப்பது எதைப் போல்!
ஜீவ ஆற்றலைப் பூதத்தில் பூட்டிய மாயனே
பூமி போல்பல கோடிகள் ஆக்கிடும் சேயனே!
காட்சிகள் உதித்ததும் உணர்ந்தது வனப்பே
பேச்சொலி பிறந்ததும் புரிந்தது கணிப்பே
நாசியில் சுகந்தத்தை நுகர்ந்தது களிப்பே
போகத்தின் அனைத்திலும் மிகுந்தது நினைப்பே!
ஜீவ ஆற்றலைப் பூதத்தில் பூட்டிய மாயனே
பூமி போல்பல கோடிகள் ஆக்கிடும் சேயனே!
