Banner images
images
பாடல்/சந்தம்:
images
எங்கள் முயற்சி

சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க
கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீங்க
மாலையை மட்டும் மாத்திடாதிங்க
அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க!!


நினைத்தபோது தூங்கியதெல்லாம் நீரின்மீது எழுத்தாய் போகும்
கார் வாங்கச் சேர்த்த பணம் காதணியும் நகையாய்ப் போகும்
மேதினிமேல் ஓடிய கால்கள் வீட்டிற்குள் முடங்கிப் போகும்
ஊருக்கே விரிந்தநட்பு சாதிசனம் சம்பிரதாயமென சுருங்கிப் போகும்


சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க
கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீங்க
மாலையை மட்டும் மாத்திடாதிங்க
அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க!!


கொண்டதேகோலம் கண்டதேகாட்சி என்பதுபோய் எதிர்காலம் எழுந்துநிற்கும்
பட்டாம்பூச்சியின் சிறகுகள்போய் பொறுப்புகள் சுமக்கும் கோவேறாகும்
தெளிவாய்த் தோன்றிய உண்மைகள் எல்லாம் வாக்குவாதத்தில் வசியமாகும்
நியாயங்கள் அநியாயமாகும் நிறைகளெல்லாம் குறைகளாகும்


சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க
கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீங்க
மாலையை மட்டும் மாத்திடாதிங்க
அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க!!