எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பாரதிதாசன் - தமிழ் கவிஞர் புகைப்படம்

பாரதிதாசன் (Bharathidasan) வரலாறு

0pt;">நிலவின் அழகை வர்ணிக்கும் பாவேந்தர்: 

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து 

நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! 

கோல முழுதும் காட்டிவிட்டால் காதல் 

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் 

சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான் 

சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ 

காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் 

கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ!


நிலாக் குளிரும் சூழலை அக்கால வறுமையோடு ஒப்பிடும் அழகு:

உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் 

    ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு 

நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை, 

    நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் 

தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் 

    சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

    கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!


இளங்காலை வான் அழகு:

கோழிகூ விற்று! வையம், கொண்டதோர் இருளைத் தங்க

மேழியால் உழுதான் அந்த விரிகதிர்ச் செல்வன்; பின்னர்

ஆழிசூழ் உலகின் காட்சி அரும்பிற்று! முனைய விழ்ந்து

வாழிய வைய மென்று மலர்ந்தது காலை வானம்!

மேழி- கலப்பை

முகிற் சேற்றுக்குள் மலர்ந்த செந்தாமரையாய் வானவில்:

அதிர்ந்தது காற்று! நீளப் பூங்கிளை அசைந்தா டிற்று!

முதிர்ந்திட்ட முகிலின் சேறு மூடிற்றுச் சேற்றுக் குள்ளே

புதைந்திட்ட கதிரிற் பூத்த புதுப்புது வண்ண மெல்லாம்

ததும்பிற்றே வான வில்லாய்! பாரடி அழகின் தன்மை!

காதல் 

வாய்விட்டுச் சிரித்துப் பின் போய்விட்ட காதலன்:

சோலையிலோர் நாள் எனையே

தொட்டிழுத்து முத்தமிட்டான்

துடுக்குத் தனத்தை என்சொல்வேன்

மாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல்

வாய்விட்டுச் சிரித்துப் பின்

போய்விட்டானேடி தோழி! « Previous Page 4 of 13 Next »