எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பாரதிதாசன் - தமிழ் கவிஞர் புகைப்படம்

பாரதிதாசன் (Bharathidasan) வரலாறு

-position: normal; vertical-align: baseline;"> (சோ)

அகம் புகுந்தான் சேயோ - அவனை எட்டி

அணக்க வழிசொல் வாயோ!

சகம் பெறும் அவன்அன்று

தந்த துடுக்கு முத்தம்!

சக்ரவாகம் போல்வந்தான்;

கொத்திப்போக மறந்தான்!

(சோ)

அந்த மானாய் நானில்லை:

தோகையவள் போகையிலே துள்ளும் வளர்ப்புமான் 

பாகல் கடித்த படுகசப்பால் ஓடிவந்தே 

அன்னாளை அண்டி அழகுமுகம் எடுக்கப் 

பொன்னான முத்தமொன்று பூவை கொடுத்தாளே 

அத்தமான் நானாய் அமைந்தேனோ? இல்லையே! 

எந்த வகையிலே ஏந்திழையை நான்பிரிவேன்?


முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ள பாங்கு:

முதியவர்:

புதுமலர் அல்ல; காய்ந்த 

  புற்கட்டே அவள் உடம்பு! 

சதிராடும் நடையாள் அல்லள் 

  தள்ளாடி விழும் மூதாட்டி 

மதியல்ல முகம் அவட்கு 

  வறள்நிலம்! குழிகள் கண்கள்! 

எது எனக்கின்பம் நல்கும்? 

  ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

முதியவள்:

அறம் செய்த கையும் ஓயும்! 

  மக்களை அன்பால் தூக்கிப் 

புறம்போன காலும் ஓயும்! 

  செந்தமிழ்ப் புலவர் சொல்லின் 

திறம் கேட்ட க

« Previous Page 5 of 13 Next »