எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பாரதிதாசன் - தமிழ் கவிஞர் புகைப்படம்

பாரதிதாசன் (Bharathidasan) வரலாறு

nt-east-asian: normal; font-variant-position: normal; vertical-align: baseline;">தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!


தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


சங்கநாதம்:

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!


தமிழ் வளர்ச்சி:

எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.

வௌியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு

தௌிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.

எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.


தமிழ்தாய்:

செந்தமிழே உயிரே நறுந் தேனே

செயலினை மூச்சினை உனக்களித் தேனே

நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

பகுத்தறிவு 

புதியதோர் உலகம் செய்வோம்:

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட 

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் 

பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் 

புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் 

இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம் 

இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்


« Previous Page 7 of 13 Next »