பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில், வணிகராயிருந்த கனகசபை, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கனக சுப்புரத்தினம்.
பாரதிதாசன் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியில் பயின்ற காலமே கூடுதலானது. ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் மகாவித்வான் ஆ. பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் தமிழ் மற்றும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். புதுவை மாநிலக் கல்வே கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார்.
பாவேந்தர் ஒரு விழாவில் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். பாரதியரால் கவரப்பட்டு அவர் மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
இவர் தன் பதினெட்டாம் வயதில் காரைக்காலைச் சேர்ந்த நிரவி எனும் ஊரில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணி ஏற்றார்.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "கே.எஸ். பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
பழனி அம்மாளை இல்லறத் துணைவியாக ஏற்றார். இவர்கள் சரசுவதி, கோபதி, வசந்தா, ரமணி எனும் மக்களைப் பெற்றெடுத்தார்கள்.
தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் மேலும் அவர் அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
செட்டிநாட்டுத் தமிழறிஞர்களிடம் கவிஞர் தொடர்பு கொண்டிருந்தார். அவர்களின் நிதி உதவியுடன் சென்னை சாந்தோம் சாலையில் 'முத்தமிழ் மன்றம்' நிறுவினார்.
1946, சூலை 29-இல் அறிஞர் அண்ணாவால், கவிஞருக்கு ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் இயற்கை, தமிழ், திராவிட இயக்கம், பெண் விடுதலை, பகுத்தறிவு, சமூக சீர்திருத்தம் ஆகிய பல தலைப்புகளில் கவிதை மற்றும் இலக்கியம் படைத்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.
தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திக் கேடயம் வழங்கி பாரதிதாசனின் இலக்கியப் படைப்புக்களைப் பாராட்டினார்.
1964 ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலிவுற்றார் பாவேந்தர். அதன் பின்னர் சென்னைப் பொது மர
Copyright © 2026 R and R Consultant
Total Hits:362323