Winner N.G.SEKARAN
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தானநன தானநன தானநன தானநன தானா
தானநன தானநன தானநன தானநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தானநன தானநன தானநன தானநன தானா
தானநன தானநன தானநன தானநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
N.G.SEKARAN எழுதிய வரிகள்:
தைரியம்
சோதனைகள் சூழ்ந்துவரும் வேளைதனில் சோர்ந்திடுதல் தீங்காம்
வேதனையில் வீழ்ந்துமனம் வாடும்நிலை நீங்கிடுதல் பாங்காம்
உறுதியெனும் வாளதுகொண்ட உறையதனைப் போலொருமனம் ஏற்றார்
இறுதிநொடி கூடிடும்வரை ஒருநொடியும் வாடிடும்செயல் ஆற்றார்
சிறியதுயர் நேரினும்மனக் கலக்கமுற்று வாழுமெவரும் தோற்றார்
சிறகிருந்தும் சோம்பிடுமொரு பறவையினைப் பாரிலெவரும் போற்றார்
சோதனைகள் சூழ்ந்துவரும் வேளைதனில் சோர்ந்திடுதல் தீங்காம்
வேதனையில் வீழ்ந்துமனம் வாடும்நிலை நீங்கிடுதல் பாங்காம்
இதயமது தோல்விபயத்தில் துவளுமெனில் தாழுமவரின் பேரே
எதுவரினும் ஏற்றிடுமொரு மனமிருக்க ஏத்திடுமிந்தப் பாரே
உதிரமதில் ஊக்கமென்பது கலந்திருக்கச் சேருமுயர்ந்த சீரே
புதியதொரு பூவெனமிகப் பொலியுமொரு வாழ்வெனுக்கது வேரே
N.G.SEKARAN
