Winner N.G.SEKARAN
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
N.G.SEKARAN எழுதிய வரிகள்:
பள்ளிநாள் ஞாபகம்
பள்ளிநாள் ஞாபகம் பரவசம் கூட்டுமே
உள்ளநாள் வரையில் உணர்ச்சியைத் தீட்டுமே
ஒட்டிப் பழகுவோம் ஒன்றாய்த் திரிந்திடுவோம்
சட்டென ஒருதினம் சண்டையில் பிரிந்திடுவோம்
எட்டு தினங்களில் அனைத்தும் மறந்திடுவோம்
நட்பில் பிணைந்து நெஞ்சம் நிறைந்திடுவோம்
பள்ளிநாள் ஞாபகம் பரவசம் கூட்டுமே
உள்ளநாள் வரையில் உணர்ச்சியைத் தீட்டுமே
போட்டி இருப்பினும் பொறாமை இருந்திடாது,
ஈட்டும் வெற்றியில் ஒழுக்கம் குறைந்திடாது,
காட்டும் அன்பினில் கபடம் உறைந்திடாது,
ஓட்டிய தினங்களை உள்ளம் மறந்திடாது
==========================================
N.G.SEKARAN
===============================
பள்ளிநாள் ஞாபகம் பரவசம் கூட்டுமே
உள்ளநாள் வரையில் உணர்ச்சியைத் தீட்டுமே
ஒட்டிப் பழகுவோம் ஒன்றாய்த் திரிந்திடுவோம்
சட்டென ஒருதினம் சண்டையில் பிரிந்திடுவோம்
எட்டு தினங்களில் அனைத்தும் மறந்திடுவோம்
நட்பில் பிணைந்து நெஞ்சம் நிறைந்திடுவோம்
பள்ளிநாள் ஞாபகம் பரவசம் கூட்டுமே
உள்ளநாள் வரையில் உணர்ச்சியைத் தீட்டுமே
போட்டி இருப்பினும் பொறாமை இருந்திடாது,
ஈட்டும் வெற்றியில் ஒழுக்கம் குறைந்திடாது,
காட்டும் அன்பினில் கபடம் உறைந்திடாது,
ஓட்டிய தினங்களை உள்ளம் மறந்திடாது
==========================================
N.G.SEKARAN
===============================
