icon

Winner மு.தை.பூமிநாதன்

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து

உறவாடும் நேரமடா...

உறவாடும் நேரமடா...


கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா..

வளர்ந்தாலே போதுமடா..

(உன்னைக்)


சித்திரப்  பூபோலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறேன்ன வேண்டுமடா...

வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)


(மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடல் பகுதிக்கு இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்.)

மு.தை.பூமிநாதன் எழுதிய வரிகள்:

இருள்நீக்கி ஒளிபொங்கும் திருநாளைப்போலே....
உன் வாழ்வில் எல்லோர்க்கும் ஒளிசேர்க்க வேண்டும்....
இறைவனின் படைப்பில் எல்லாம் புதுமை..
மகிழ்வாய்....பகிர்வாய்.......அதில்தானே இனிமை....
அழகான வாழ்வில் உலகோடு சேர்ந்து
மகிழ்ந்தாட வேண்டும்டா....
மகிழ்ந்தாட வேண்டுமடா......




மு.தை.பூமி



வெற்றியாளர் மு.தை.பூமிநாதன் என்ன கூறுகிறார்

மதிப்பிற்கும் போற்றுதலுக்குமுரிய ஒரு சரணம் வலைதள நிர்வாகிக இயக்குனர்களுக்கும் உறுப்பினர்களும் என் மனமார்ந்த நன்றி. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. தாய் மொழி மீது எல்லோருக்கும் இருக்கும் உரிமையும் ஆர்வமும் எனக்கும் உண்டு. அதைத் தவிர தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் பேராசையும் எனக்கு இருக்கிறது. வள்ளுவரையும் பாரதியையும் படித்துக்கொண்டே இருக்கிறேன். கவிதை என்ற பெயரில் எனக்கு கிடைத்த வலைத்தள சுதந்திரத்தைப் பயன்படுத்தி "மகாகவி பாரதி வழியில்" என்ற YouTube வழியாக பகிர்ந்து வருகிறேன். தற்செயலாக முகநூல் பக்கத்தில் தங்களின் வலைத்தள அறிவிப்பைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கவிதைக்கு பரிசா? சங்ககால தமிழ் அரசர்கள் இப்படி பரிசு வழங்கியதாக படித்திருக்கிறோம். ஆனால் அவற்றை இன்று செயல்முறை படுத்தும் தங்களின் தமிழ் பற்றைப் போற்ற வார்த்தைகள் இல்லை. உடனே பதிவு செய்து அனைத்து கவிதைகளையும் படித்து ... கேட்கப்பட்ட தலைப்புகளுக்கு கவிதைகள் எழுதி அனுப்பினேன். இவ்வளவு விரைவாக எனக்கும் பரிசு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஓர் இன்ப அதிர்ச்சி.... இன்னும் ஒரு சரணம் என்ற தலைப்பில் உன்னைக் கண்டு நானாட என்ற பழைய பாடலுக்கு நான் எழுதிய ஒரு சரணத்திற்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்களின் முயற்சியால் கவிதை எழுதும் ஆர்வம் இன்னும் அதிகமாகியுள்ளது. தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வெல்க தமிழ்.               

 என்றும் அன்புடன்
மு.தை.பூமிநாதன்