icon

Winner மு.தை.பூமிநாதன்

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

மு.தை.பூமிநாதன் எழுதிய வரிகள்:

பல்லவி
உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் இருந்தால் அவனே மனிதனடா.......
அவனே மனிதனடா.....
பொய்யும் புரட்டும் சூழ்ந்திடும்
உலகில் அவனே புனிதனடா,.......
அவனே புனிதனடா......

சரணம் 1
ஆசையும் கோபமும் சேர்ந்திடும் மனதில்
அழுக்குகள் தேங்கிநிற்கும்.....
ஆனவம் கண்களை மறைப்பதனால் அங்கு அக்ரமம் ஓங்கி நிற்கும்....
நம் செயலால் பிறர் துன்பத்தை அடைந்தால் அது பெரும் சுயநலமே....
மனதிற்குத் தெரிந்தே தவறுகள் செய்தால் மனிதம் இறந்திடுமே.....

பல்லவி
உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் இருந்தால் அவனே மனிதனடா.......
அவனே மனிதனடா.....
பொய்யும் புரட்டும் சூழ்ந்திடும்
உலகில் அவனே புனிதனடா,.......
அவனே புனிதனடா......

சரணம் 2
நெஞ்சுக்குள் நீதியும் வாய்மையும் இருந்தால் மனிதம் மலர்ந்திருக்கும்....
நேர்படப் பேசிடும் மாசில்லா மனதில்
நிம்மதி வளர்ந்திருக்கும்....
உள்ளத்தின் தூய்மை ஒன்றே போதும்
அதுவே அறமாகும்....
நம் வள்ளுவன் கூறிய வாழ்கை நெறி
வாழ்வின் உரமாகும்.....

மு.தை.பூமி





வெற்றியாளர் மு.தை.பூமிநாதன் என்ன கூறுகிறார்

மதிப்பிற்கும் போற்றுதலுக்குமுரிய ஒரு சரணம் வலைதள நிர்வாகிக இயக்குனர்களுக்கும் உறுப்பினர்களும் என் மனமார்ந்த நன்றி. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. தாய் மொழி மீது எல்லோருக்கும் இருக்கும் உரிமையும் ஆர்வமும் எனக்கும் உண்டு. அதைத் தவிர தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் பேராசையும் எனக்கு இருக்கிறது. வள்ளுவரையும் பாரதியையும் படித்துக்கொண்டே இருக்கிறேன். கவிதை என்ற பெயரில் எனக்கு கிடைத்த வலைத்தள சுதந்திரத்தைப் பயன்படுத்தி "மகாகவி பாரதி வழியில்" என்ற YouTube வழியாக பகிர்ந்து வருகிறேன். தற்செயலாக முகநூல் பக்கத்தில் தங்களின் வலைத்தள அறிவிப்பைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கவிதைக்கு பரிசா? சங்ககால தமிழ் அரசர்கள் இப்படி பரிசு வழங்கியதாக படித்திருக்கிறோம். ஆனால் அவற்றை இன்று செயல்முறை படுத்தும் தங்களின் தமிழ் பற்றைப் போற்ற வார்த்தைகள் இல்லை. உடனே பதிவு செய்து அனைத்து கவிதைகளையும் படித்து ... கேட்கப்பட்ட தலைப்புகளுக்கு கவிதைகள் எழுதி அனுப்பினேன். இவ்வளவு விரைவாக எனக்கும் பரிசு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஓர் இன்ப அதிர்ச்சி.... இன்னும் ஒரு சரணம் என்ற தலைப்பில் உன்னைக் கண்டு நானாட என்ற பழைய பாடலுக்கு நான் எழுதிய ஒரு சரணத்திற்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்களின் முயற்சியால் கவிதை எழுதும் ஆர்வம் இன்னும் அதிகமாகியுள்ளது. தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வெல்க தமிழ்.               

 என்றும் அன்புடன்
மு.தை.பூமிநாதன்