
Winner சரஸ்வதி நா
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
சரஸ்வதி நா எழுதிய வரிகள்:
உலகாளும் இனியபுகழ் ஓதிடும்நல் செம்மொழியாம்
பலமொழியும் பின்நிற்க பாரினிலே சிறந்தவளாம்
ஆதியிலே தோன்றிட்ட அழகுதமிழ் சொல்லாமே
ஓதியுனை கற்றிடவே உயர்ந்திடுமென் நன்நாவே
பாதியுயிர் பிரிகையிலும் படித்திடுவேன் மனத்தாலே
மீதியுனை பயின்றிடவே மீண்டிடுவேன் மறுமையிலே
உலகாளும் இனியபுகழ் ஓதிடும்நல் செம்மொழியாம்
பலமொழியும் பின்நிற்க பாரினிலே சிறந்தவளாம்
வாடிநானும் தவிக்கையிலே வாழ்வளிக்கும் நன்மொழியே
பாடிநானும் மகிழ்ந்திடவே பைந்தமிழும் வருவாயே
தேடியுனைப் படிக்கையிலே தேகமெல்லாம் சிலிர்த்திடுதே
நாடிநின்று ஓதிடவே நல்வாழ்வைத் தந்திடுதே