icon

Winner Balamahesh

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

Balamahesh எழுதிய வரிகள்:

பல்லவி:
காலையிலே கலக்குறா கண்ணழகி கோமதி, மாலையிலே மயக்குறா மல்லிப்பூ மாலதி,
ராத்திரி ரசிக்கிறவ ரகசிய ரேவதி, படுக்கையில் புரட்டுறா பரவச பார்வதி

அனுபல்லவி:
மனசை பிரிக்கிறா, உசுரை உறிக்கிறா, கண்ணைக் கொஞ்சம் காட்டி என்னைக் கலங்க அடிக்கிறா,
வளைச்சுப் பிடிக்கிறா, வயசைக் குடிக்கிறா, இதயத்தை விட்டுக் கொஞ்சம், வெளியே துடிக்கிறா,

சரணம் 1:
மார்கழி மாத பஜனை, பொழியுது பனி மூட்டம், மாலதி பாட்டுக் கேட்க கூடுது பெரும் கூட்டம்,
அங்கிருந்தே விட்டேன் நெய் பொங்கலை ஒரு நோட்டம், அத்தோடு போய்ட்டா அவ என்மேல ஏன் காட்டம்,
12ம் நம்பர் பஸ்ஸில பளிச்னு ஒரு பொண்ணு, எக்குத்தப்பா விழுந்துச்சி அவமேல என் கண்ணு,
கோமதியும் பார்த்துட்டா கோவில் ஓரம் நின்னு, கடவுளே பண்ணினேன் நான் பெரிய sinனு

சரணம் 2:
காபி ஷாப்ல பொண்ணு ஒன்னு singleஆனு கேட்க, கண்ண சுழட்டி நாலா புறம் நானும் கொஞ்சம் பார்க்க,
துணிச்சலா அவமேல என் காதல் பார்வை தாக்க, தூக்கிட்டு வந்து நின்னா ரேவதி சிவந்த மூக்க,
அதிகாலை 4 மணிக்கு அட்டென் பண்ணினேன் போன், அவசரத்துல சொல்லிப்புட்டேன் அனிதா சொல்லுங்கன்னு,
எதிர் முனையில் பேசினது என்னோட பார்வதி கண்ணு, எதிர்காலத்தையே முழுங்கிட்டா வாயில போட்டு மென்னு

திமிரா சுத்தின்னேன்டா ஆகிட்டேன் நிர்க்கதி, தெருவிலே நிற்கிறேனே எனக்கு இனி யார்கதி, எனக்கு இனி யார்கதி?

என்றும் எழுத்துடன்,
பாலா மகேஷ்



பாடலைக் கேளுங்கள்



வெற்றியாளர் Balamahesh என்ன கூறுகிறார்

என்னை முதன் முதலில் கவிதை எழுத தூண்டியது ஒருசரணம் தளம் தான்.அதன் பின்னர் இரண்டு மாதங்களில் சில தளங்களில் பல சான்றிதழ்கள் பெற்றாலும்  எனது கவிதை பயணத்தின் வாசல் தளமான ஒருசரணத்தில், இரண்டாம் முயற்சியிலேயே என் கவிதையை தேர்ந்தெடுத்து, பெறப்போகும்  சாதனைகளின் ஆணி வேராய் அமைந்த இத்தளத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் ஊக்குவிக்கும் முறைகண்டு நெகிழ்ந்து போகிறேன்.

வலியோரை போற்ற கரங்கள் பலவுண்டு,
மெலியோரை ஏற்ற மனங்கள் குறைவே,
அளித்த ஊக்கம் அரும்பாய் மலர்ந்து,
விழித்த ஏக்கம் வீரியமாய் வளர்ந்து,
செழித்த வித்தோன்று விருட்சமாய் ஒளிரும்.
குழுவினருக்கு நன்றிகள் கோடி