Winner Balamahesh
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
Balamahesh எழுதிய வரிகள்:
பல்லவி,
பணம் பணம் னு தினமும் சேர்க்குற
பணத்துக்காக நீ குணத்தில் தோக்குற,
எவ்ளோ இருந்தாலும் இன்னும் கேக்குற,
கிடைச்ச gap ல போட்டுத் தாக்குற,
பணம்…………..ஆஹா பணம்
பணம்…………..ஓஹோ பணம்,
அனுபல்லவி,
வயசையும் மறந்து வீட்டையும் துறந்து,
ஆடம்பரம் வேண்டி கடல் தாண்டிப் பறந்து,
கண்ணமூடி ஓடுற எங்கோ,
கரன்சிக்கே நீதான் king ஓ,
உயரம் நிலையாதே உயிரும் நில்லாதே,
அடிச்சு புடிச்சு நீ நிறைய சேர்ந்துட்டா
உனக்கென்ன நிரந்தரப் பங்கோ,
செத்துட்டா தங்கத்துல சங்கோ,
சரணம் 1,
வாழ்க்கை பயணமே முடியும் நேரத்திலே,
பணத்தால நொடிகூட வாங்க முடிவதில்லே,
அமர்ந்து அனுபவிக்க ஏங்கும் காலத்திலே,
மனசு துடித்தாலும் உடம்பு எழுவதில்லே,
அப்பளமா ஒட்டிப் போன தொப்பைவயிறு,
அதையும் உருவு வெள்ளி அருணாகயிறு,
அந்தி சாயப்போகுது கொஞ்சம் எல்லாம்நவுரு,
அடுத்த second வச்சுடுவான் body கு fire,
சரணம் 2,
வறுமையைக் கண்டால் இறங்கு ஒருபடி,
வழியின்றி ஏங்கும் விழிகள் பலகோடி,
நிறையாத வயிறுள்ள உயிர்கள் ஏராளம்,
குறையாத மனதோடு செய்வோம் தாராளம்,
அன்பாய் உணவளித்து உறங்கிப்பாரு,
அந்த உன்னத இரவுக்கு சொர்க்கம்னு பேரு,
இனியேனும் தர்மத்தின் படியில் ஏறு
இறந்தும் வாழ்வாய் ஆண்டுகள் நூறு.
என்றும் எழுத்துடன்,
பாலா மகேஷ்.
பணம் பணம் னு தினமும் சேர்க்குற
பணத்துக்காக நீ குணத்தில் தோக்குற,
எவ்ளோ இருந்தாலும் இன்னும் கேக்குற,
கிடைச்ச gap ல போட்டுத் தாக்குற,
பணம்…………..ஆஹா பணம்
பணம்…………..ஓஹோ பணம்,
அனுபல்லவி,
வயசையும் மறந்து வீட்டையும் துறந்து,
ஆடம்பரம் வேண்டி கடல் தாண்டிப் பறந்து,
கண்ணமூடி ஓடுற எங்கோ,
கரன்சிக்கே நீதான் king ஓ,
உயரம் நிலையாதே உயிரும் நில்லாதே,
அடிச்சு புடிச்சு நீ நிறைய சேர்ந்துட்டா
உனக்கென்ன நிரந்தரப் பங்கோ,
செத்துட்டா தங்கத்துல சங்கோ,
சரணம் 1,
வாழ்க்கை பயணமே முடியும் நேரத்திலே,
பணத்தால நொடிகூட வாங்க முடிவதில்லே,
அமர்ந்து அனுபவிக்க ஏங்கும் காலத்திலே,
மனசு துடித்தாலும் உடம்பு எழுவதில்லே,
அப்பளமா ஒட்டிப் போன தொப்பைவயிறு,
அதையும் உருவு வெள்ளி அருணாகயிறு,
அந்தி சாயப்போகுது கொஞ்சம் எல்லாம்நவுரு,
அடுத்த second வச்சுடுவான் body கு fire,
சரணம் 2,
வறுமையைக் கண்டால் இறங்கு ஒருபடி,
வழியின்றி ஏங்கும் விழிகள் பலகோடி,
நிறையாத வயிறுள்ள உயிர்கள் ஏராளம்,
குறையாத மனதோடு செய்வோம் தாராளம்,
அன்பாய் உணவளித்து உறங்கிப்பாரு,
அந்த உன்னத இரவுக்கு சொர்க்கம்னு பேரு,
இனியேனும் தர்மத்தின் படியில் ஏறு
இறந்தும் வாழ்வாய் ஆண்டுகள் நூறு.
என்றும் எழுத்துடன்,
பாலா மகேஷ்.
