icon

Winner சீ. முகில் ஹர்ரீஸ்

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

சீ. முகில் ஹர்ரீஸ் எழுதிய வரிகள்:

பள்ளிக்கூட வகுப்பில் நாங்க சேட்டையான கூட்டம்
அது கூட்டம்இல்ல கூட்டம்இல்ல எங்களோட தோட்டம்

சுத்துசுவர் ஏறி நாங்க உள்ள குதிச்சோம்
கணக்கு வாத்தி கண்ணுலதான் மாட்டி தொலச்சோம்
அடி வாங்கி அழுதுகிட்டே ஆள முறைச்சோம்
வகுப்பு பொண்ணு சிரிக்கிறான்னு கால மறைச்சோம்

பள்ளிக்கூட வகுப்பில் நாங்க சேட்டையான கூட்டம்
அது கூட்டம்இல்ல கூட்டம்இல்ல எங்களோட தோட்டம்

வந்தாரை வரவேற்கும் வாத்தியாரு பிரம்பு
பொட்டிக்கடை ஆயாகிட்ட நாங்கபண்ண குறும்பு
அந்தநாள் ஞாபகம் நினைவில்இன்னும் இருந்து
தள்ளாடும் உள்ளத்துக்கு தடவுதம்மா மருந்து

பள்ளிக்கூட வகுப்பில் நாங்க சேட்டையான கூட்டம்
அது கூட்டம்இல்ல கூட்டம்இல்ல எங்களோட தோட்டம்

பாடலைக் கேளுங்கள்