icon

Winner ச. சத்தியபானு

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

ச. சத்தியபானு எழுதிய வரிகள்:

நேற்றொரு மேனகை ஆடிக்களித்தாள் காலத்தின் விளிம்பினில்
இன்றொரு ஊர்வசி பாடிவந்தாள் கோலத்தின் பொலிவினில்

மண்ணில் விளைந்த மல்லிகை மொட்டுகள் மங்கையின் சிரிப்பினைச் சொல்லுமே
விண்ணில் படர்ந்த மெல்லிய மேகம் மேனியின் அழகினைப் பின்னுமே
பெண்ணின் பெருமை காலம் கடந்து புதிய பரிமாணம் கொள்ளுமே
கண்ணின் கருமணி காட்டும் ஒளியில் கலைகள் யாவும் துள்ளுமே

நேற்றொரு மேனகை ஆடிக்களித்தாள் காலத்தின் விளிம்பினில்
இன்றொரு ஊர்வசி பாடிவந்தாள் கோலத்தின் பொலிவினில்

அன்று தெரிந்த அப்சரஸ் அழகோ ஆதியில் எழுதிய கவிதையாம்
இன்று மலர்ந்த நவீன எழிலோ காவியம் சொல்லும் புதுமையாம்
நின்று நிலைக்கும் நேர்த்தியான இந்த நளினம் உலகிற்குத் தேவையாம்
சென்று சேரும் திசைகள் எங்கும் தேவதை பாதம் போதையாம்

ச. சத்தியபானு
சிவகங்கை