icon

Winner Dr.Anithasri Ragul

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

Dr.Anithasri Ragul எழுதிய வரிகள்:

பெற்றெடுத்த நாடு இது தாய்த் தமிழ்நாடு
ஞானத்தமிழ் பால் சுரக்கும் தீந்தமிழ் நாடு
(பல்லவி)

விண்ணை முட்டும் கோயில்களில் பக்தியோடு ஆளுமையும்
பொன்னை ஈட்டும் வாணிபத்தில் மதிநுட்பத்தோடு வீரத்தையும்
கண்ணுக்கெட்டா தேசங்களில் பெருமையோடு புகழ்சேர்க்க - தாய்
மண்ணை விட்டு கடல்கடந்த புத்திரர் ஈண்ட நாடு இது (சரணம் 1)

சிந்தை சிறக்க ஞானந்தனை வேண்டி இங்கே வருவோர்க்கும்
சந்தை நிறைய செல்வந்தனை வேண்டி இங்கே திரள்வோர்க்கும்
எந்தம் வழிமுறை அறவொழுக்கம் நீதிநெறியுடன் நன்னெறியாய்
நித்தம் வாழ்ந்தே வளர்ந்து நிற்கும் உத்தம உயர்ந்த நாடு இது. (சரணம் 2)