Winner R.Yuvarama Krishnan
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
R.Yuvarama Krishnan எழுதிய வரிகள்:
பல்லவி
தென்குமரி அலையோடும் மேற்குத் தொடர்ச்சி மலையோடும்
பல்லாண்டு காலமானாலும் முத்தமிழ் வளர்த்த பெருமை பாடு
சரணம் 1
தென்றலோடு தங்கியிங்க சங்கம் தந்த நன்னாடு
வீர ஈரக் கண்களோடு மூவேந்தர் வளர்த்த செந்நாடு
கலைச் சிற்பக் கவியோடு முக்கனிகள் விளைத்த பொன்னாடு
ஏறு பிடித்த கைகளோடும் கூறுபோடும் மறநாடு!
சரணம் 2
அலைகடல் தாண்டி அறம் பாடும் அன்பைத் தூவும் தென்னாடு
தேகம் வியர்த்த செழிப்போடு பொற்புடன் வாழும் திருநாடு
பஞ்சின் மெல்லிய அன்போடு புலியெனப் பாயும் எம்நாடு
தரணியில் உயர்ந்த தனிநாடு தனித்துவம் மிக்க தமிழ்நாடு!