icon

Winner கி.சத்தியன்.

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

தானன தன்நன்ன னானா - தன

தானன தன்நன்ன னானா


தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா

தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா


தானன தன்நன்ன னானா - தன

தானன தன்நன்ன னானா


தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா

தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா


தானன தன்நன்ன னானா - தன

தானன தன்நன்ன னானா


தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா

தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா


கி.சத்தியன். எழுதிய வரிகள்:

பல்லவி

ஆருயி ரென்றென்னில் பூத்தாய்!-- மனம்
ஆறுதல் தந்தென்னைக் காத்தாய்!

சரணம்
ஏனோ! சொந்தம்என் றுனக் கென நானே
ஆதியில் வந்திங்கு ஆனேன்!
தேனா தித்திக்கும் கரும் பெனத் தானே
வேறெவ ரும்எங்கும் காணேன்!
( ஆருயிரென்...)

மூச்சாய் எந்தன்இன் னுயிர் கலந் தேநீ
ஆள்கிற நல்லின்பப் பேறே!
ஆச்சே, எந்தன்அன் பினில் பிறந் தேநீ
வாழ்கிற பொன்சிற்பத் தேரே!
( ஆருயிரென்...)

ஆரோ!! அன்னத்தின் எழில் விழி யேநீ
தூளியில் சொர்க்கம்வெல் வாயே!
ஏறே!! வெண்சங்கின் ஒலி யிசை யேநீ
வாழிய!! நற்கல்வி யாலே!
( ஆருயிரென்...)



பாடலைக் கேளுங்கள்



வெற்றியாளர் கி.சத்தியன். என்ன கூறுகிறார்

வணக்கம். 


சிறுவயதில் இருந்தே தமிழின்பால் அதீத ஈடுபாடு எனக்கு உண்டு. கவிதை புனைவது எனக்கு  பிடிக்கும். கற்பனைக் குதிரையை அவ்வபோது அவிழ்த்து விடுவேன். நிறைய கவிதைகள் குப்பைக்காகிதமாக்கி கொண்டேன்


படிக்கிற காலம் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். ஆனாலும் ஆதங்கம். ஏக்கம். 


ஒருமுறை முகநூல் பக்கங்களில் சுற்றிஅலைந்தேன். என் கண்களில் பளிச்சிட்டது ஒரு சரணம் இணையதளம் மின்னலென விழித்தேன். எனக்கு பிடித்தமான அந்த தளத்தையே சுற்றி சுற்றி வந்தேன் அருமையான கவிதை பிறந்தது சந்தக்கவிதைகள் இயல்பாகவே எனக்கு வரும். எளிமையான என் கவி நடைக்கு ஏற்றாற்போல் உள்ள சந்தக்கவிதை

ஒரு சரணம் இணையதளத்திற்கு அனுப்பினேன். என் கவிதைக்கு முதல் பரிசு என என் காதுகளுக்கு எட்டியதும்  நான் பெற்ற மகிழ்ச்சி அபரிமிதமானது


இத்தளத்தை உருவாக்கி என் போன்றோருக்கு வழிகாட்டும் உன்னத இந்த குழுமத்திற்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். மீண்டும் நன்றிகள் பல.