icon

Winner கி.சத்தியன்.

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்

கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்


மங்காத இன்பமே மனைவியினாலே

மாமியார் வீடே சொர்க்கத்தைப் போலே

ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்

வேணும் கட்டாயம் வாழ்விலே….. கல்யாணம்

வேணும் கட்டாயம் வாழ்விலே…… கல்யாணம் வைபவம்..

மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்


கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்

கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்


ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே…. அன்றைய தினமே…
சரசா, கிரிஜா, ஜலஜ்ஜ, வனஜா

மாலினி, லோசனி, மஞ்சுளா, வாகினி

யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி

பட்டண பெண்ணோ பட்டிக்காடோ கட்டின ராஜ ஹனி மூன் போடா


கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்

கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்

கி.சத்தியன். எழுதிய வரிகள்:

இன்னும் ஒரு சரணம் :-

அன்பான தங்கமே அழகுடை மானே
ஆசையால் நானே இன்பங்கண் டேனே
நெட்டையோ குட்டையோ
வெண்மையோ கருமையோ
சீக்கிரம் கிட்டியே ஆகணும் வாழ்விலே
கல்யாணம் கட்டிநீ வாழணும்...சுவையான
கேக்குகள் வெட்டியே கொண்டாடித்
தீரணும்
உன்னோட மகிழ்வுக்கு "பொண்டாட்டி"
காரணம்

கல்யாணம்... ஆஹ்.. ஆஹாஹ்.. ஆஹ்
கல்யாணம்... ஆஹ்.. ஆஹாஹ்.. ஆஹ்..
கல்யாணம்





வெற்றியாளர் கி.சத்தியன். என்ன கூறுகிறார்

வணக்கம். 


சிறுவயதில் இருந்தே தமிழின்பால் அதீத ஈடுபாடு எனக்கு உண்டு. கவிதை புனைவது எனக்கு  பிடிக்கும். கற்பனைக் குதிரையை அவ்வபோது அவிழ்த்து விடுவேன். நிறைய கவிதைகள் குப்பைக்காகிதமாக்கி கொண்டேன்


படிக்கிற காலம் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். ஆனாலும் ஆதங்கம். ஏக்கம். 


ஒருமுறை முகநூல் பக்கங்களில் சுற்றிஅலைந்தேன். என் கண்களில் பளிச்சிட்டது ஒரு சரணம் இணையதளம் மின்னலென விழித்தேன். எனக்கு பிடித்தமான அந்த தளத்தையே சுற்றி சுற்றி வந்தேன் அருமையான கவிதை பிறந்தது சந்தக்கவிதைகள் இயல்பாகவே எனக்கு வரும். எளிமையான என் கவி நடைக்கு ஏற்றாற்போல் உள்ள சந்தக்கவிதை

ஒரு சரணம் இணையதளத்திற்கு அனுப்பினேன். என் கவிதைக்கு முதல் பரிசு என என் காதுகளுக்கு எட்டியதும்  நான் பெற்ற மகிழ்ச்சி அபரிமிதமானது


இத்தளத்தை உருவாக்கி என் போன்றோருக்கு வழிகாட்டும் உன்னத இந்த குழுமத்திற்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். மீண்டும் நன்றிகள் பல.