
Winner Indhumathi. K T
- வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
கூட்டிலிட்ட கிளியைப் போல மாட்டிக்கொண்டேன்
குடும்பம் எனும் சுழல்தனிலே சிக்கிக்கொண்டேன்
பாட்டிலிட்டால் வந் தெனக்குன் அருள்செய்வாயா
பாதைதனைக் காட்டி யெனக்கோர் வழிசொல்வாயா
(மேலே உள்ள சரணம் போல் நான்கு அடி சரணம் ஒன்று அடிக்கு நான்கு சீருக்கு குறையாமல் எழுதி உள்ளிட்டு போட்டியில் கலந்துகொள்ளுங்கள்)
Indhumathi. K T எழுதிய வரிகள்:
ஏட்டுக்கல்வி படித்தும் கூட கோட்டைவிட்டேன்
சூழ்நிலை விரித்த வலைதனிலே மாட்டிக்கொண்டேன்
உணர்ந்துவிட்டால் மன்னித் தெனைஉன் பாதம்சேர்ப்பாயா
பாவங்களை கணக்கிட் டென்னை பழிதீர்ப்பாயா
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
சூழ்நிலை விரித்த வலைதனிலே மாட்டிக்கொண்டேன்
உணர்ந்துவிட்டால் மன்னித் தெனைஉன் பாதம்சேர்ப்பாயா
பாவங்களை கணக்கிட் டென்னை பழிதீர்ப்பாயா
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே