icon

Winner J.saralamanjoo

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தாநானா தானன தானன தாநானா

தாநானா தானன தானன தாநானா


தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன


தாநானா தானன தானன தாநானா

தாநானா தானன தானன தாநானா


தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன


J.saralamanjoo எழுதிய வரிகள்:

ரசம் : சோகம்( கணவன் சோகமாக பாடுவதைப் போலவும் மனைவி ஆறுதல் கூறுவதைப் போலவும் அமைத்திருக்கிறேன் )

ஓ!மானே! ஏனிது வேதன தீராதோ?!
வா!மாமா! நாளிது நாளிது மாறாதோ?!

மேக மோடிவர மயிலாடுது வா!மயிலு!
வேக மாகவர உனதாகிட வா!மயிலு!
சோக மேறுதடி! தடுமாறுது போ!மயிலு!
நாக மானதடி! கடனாடுது போ!மயிலு!

ஓ!மானே! ஏனிது வேதன தீராதோ?!
வா!மாமா! நாளிது நாளிது மாறாதோ?!

தாக மேறிவர மனமாடுது வா!மயிலு!
சோக மோடிவிட உறவாடிட வா!மயிலு!
போக நேரமடி! கனமாகுது போ!மயிலு!
சாக தோணுதடி! மனசாறல போ!மயிலு!



வெற்றியாளர் J.saralamanjoo என்ன கூறுகிறார்

கவிஞர்களைப் பாடலாசிரியர்களாக உருவாக்கும், சந்தம் வைத்து தமிழ் வளர்க்கும் அற்புதமான..ஒரு சரணம் வலைதளத்துக்கு மிக்க நன்றி. என் தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர். சிறுவயதிலிருந்தே எனக்குத் தமிழ் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு முன்பு இரண்டு வருடங்களாக வேறு வேறு தமிழ் செயலிகளில் கவிதைகள் எழுதி,சான்றிதழ்களை வென்றிருக்கிறேன். அது மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும், பரிசுத் தொகையாகப் பணம் தந்திருக்கும் ஒரு சரணம் வலைத்தளமே என்னை ஆச்சரியத்திற்கும் பெரும் மகிழ்ச்சிக்கும் ஆளாக்கி இருக்கிறது. சமூகத்தில் கவிஞராய் ஒரு அந்தஸ்து கிடைத்திருப்பது போல உணர்கிறேன். நன்றிகள் நன்றிகள் பல கோடி..