icon

Winner K Sivakumar

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

தானன தன்நன்ன னானா - தன

தானன தன்நன்ன னானா


தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா

தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா


தானன தன்நன்ன னானா - தன

தானன தன்நன்ன னானா


தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா

தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா


தானன தன்நன்ன னானா - தன

தானன தன்நன்ன னானா


தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா

தானா தன்நன்ன தன னன னானா

தானன தன்நன்ன னானா


K Sivakumar எழுதிய வரிகள்:

சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம் தந் தாயே. 

பூவாய் இம் மண்ணில் புது மலர் ஆனாய்! 
பொழுதும் என் நெஞ்சில் தேனாய். 
காணா இன்பத்தில் என துயி ரானாய்! 
காலமும் உன் அன்பைத் தாராய்.

சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம் தந் தாயே. 

தேனாய்த் தித்திக்க எனை அழைப் பாயே. 
தேடிடும் இன்பம் தந்தாயே.. 
கோனாய்த் திக்கெட்டும் புகழடைவாயே. 
தேவனும் உன் பக்கம் சேயே.

சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம் தந் தாயே. 

மானாய் உன் அன்னை மடி அமர்ந் தாயே 
தேனென தித்திக்க நீயே! 
வீழா நிற்கின்ற தமிழ் மொழி போலே
வாழணும் இம் மண்ணின் மேலே. 

சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம்தந் தாயே.


கோ. சிவகுமார், சென்னை.





வெற்றியாளர் K Sivakumar என்ன கூறுகிறார்

அன்புள்ள ஐயா. 

என்னுடைய கவிதையை பரிசுக் கவிதையாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி கவுரவித்ததற்கு மிக்க நன்றி. 

சிறு வயது முதல் கண்ணதாசன் பாடல்களை விரும்பிக் கேட்பேன். 
பாடலின் எளிமையும் கருத்தாழமிக்கச் சொற்களும் என்னை வாலிப வயதில் மிகவும் ஈர்த்தன. 
அவ்வப்போது சிறு குறு கவிதைகள் எழுதி பாராட்டுக்கள் பெற்றுள்ளேன்.  

அன்று ஒருநாள் யதேச்சையாக வலைத்தளங்களில் கவிதைப் போட்டி பற்றி தேடும் போது தங்களின்  ஒரு சரணம். காம் வலைதளம் கண்ணில் பட்டது. என்னுடைய பாடல் எழுதும் பசிக்கு தீனி போடும் விதமான சுவையான கவிதைப் போட்டிகள் கண்டு இன்புற்றேன். 'அடடா, இதுநாள்  தெரியாமல் போச்சே' என்று எண்ணத் தோன்றியது. 

ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பரிசும் பெற்றேன்.மகிழ்ச்சி.
தொடர்ந்து பாடல் எழுதி மேலும் பல பரிசுகளைப் பெறுவேன் என நம்புகின்றேன். 

தங்களின் இந்த அரிய சேவை பல கவிஞர்களை  ஊக்குவித்து வெளியுலகற்கு அறிமுகப்படுத்தும் 
தளமாக அமைந்திருக்கிறது  கண்டு மிகவும் மகிழ்ச்சி. 

பணி தொடரட்டும்! 
பரிசு மழை பொழியட்டும்

நன்றி. 
கோ. சிவகுமார்