Winner K Sivakumar
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தானநன தானநன தானநன தானநன தானா
தானநன தானநன தானநன தானநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தானநன தானநன தானநன தானநன தானா
தானநன தானநன தானநன தானநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
தனனநன தானனநன தனனநன தானனநன தானா
K Sivakumar எழுதிய வரிகள்:
பாடிவரும் சோலைக்குயில் போல மனம் பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம் ஆடிடுது தானே!
சரணம் 1
கனவு இது வோவெனமனம் ஒருநிமிடம்
வாடிடும் நிலை ஏனோ?
நனவு இது தானென மனம் உணருவதும்
தேவனின் அருள் தானோ!
மனது அது பூமழைதனில் நனையுமொரு
நாளிது சுப நாளோ!
எனது மன வானிலும் இனி இருளகற்றும் சூரியஒளி நாளோ!
பாடிவரும் சோலைக்குயில் போல மனம்
பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம்
ஆடிடுது தானே!
சரணம் 2
எனது உடல் மானென மிக உயரமிகத் தாவிட மகிழ் வேனே!
எனது மன வீணையில் இனி புதியதொரு
ராகமும் இசைப் பேனே!
எனது மன ஆலயம் உறை கடவுளருள்
கூடிவருவ தாலே!
எனது வருங் காலமும் இனி வசந்தமென
ஆகிடும் புவி மேலே!
பாடிவரும் சோலைக்குயில் போல மனம்
பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம்
ஆடிடுது தானே!
கோ. சிவகுமார், சென்னை.
ஆடி வரும்தோகை மயில் போல பதம் ஆடிடுது தானே!
சரணம் 1
கனவு இது வோவெனமனம் ஒருநிமிடம்
வாடிடும் நிலை ஏனோ?
நனவு இது தானென மனம் உணருவதும்
தேவனின் அருள் தானோ!
மனது அது பூமழைதனில் நனையுமொரு
நாளிது சுப நாளோ!
எனது மன வானிலும் இனி இருளகற்றும் சூரியஒளி நாளோ!
பாடிவரும் சோலைக்குயில் போல மனம்
பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம்
ஆடிடுது தானே!
சரணம் 2
எனது உடல் மானென மிக உயரமிகத் தாவிட மகிழ் வேனே!
எனது மன வீணையில் இனி புதியதொரு
ராகமும் இசைப் பேனே!
எனது மன ஆலயம் உறை கடவுளருள்
கூடிவருவ தாலே!
எனது வருங் காலமும் இனி வசந்தமென
ஆகிடும் புவி மேலே!
பாடிவரும் சோலைக்குயில் போல மனம்
பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம்
ஆடிடுது தானே!
கோ. சிவகுமார், சென்னை.
