icon

Winner K Sivakumar

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

K Sivakumar எழுதிய வரிகள்:

கல்யாணம் பண்ணிக்காதீங்க. காளைவயதினரே,
கல்யாணம் பண்ணிக்காதீங்க.
அனுபவம் சொல்லித் தந்த
வாழ்க்கைப்பாடம் இதுதானுங்க.



சரணம்1

ஆளை மயக்கி ஆசைகள் வளர்த்தி
ஆயுள் வரைக்
கைதியாய் ஆக்குமுங்க.

நாளும் பொழுதும் நாடகம் நடத்தி
தேடும் நிம்மதி
யாவையும் போக்குமுங்க.

தாலி யென்னும் வேலி இட்டு
தனிப்பட்ட எண்ணங்களை
வேருடன் வீழ்த்துமுங்க.

சொந்தம் பந்தம் சுற்றங்கள் என்னும்
சுழலினில் வீழ்த்தி சோகத்தில் ஆழ்த்துமுங்க.

(கல்யாணம்)

சரணம்2.

பிள்ளைகளென்றும் பெரியவர்களென்றும்
குடும்பத்தைப் பெருக்கி
காசுகளைக் கரைக்குமுங்க.

தொல்லைகளைத் துயரங்களைத்
தொடர்கதை ஆக்கியே
வாழ்வினை கெடுக்குமுங்க.

தனி மனித சுதந்திரம்
பறிபோகும் மனநிலை
தினம் தினம் கொடுக்குமுங்க.

மனப்பொருத்தம் கெடுத்து
மன அழுத்தம் கொடுத்து
மயானத்தில் முடிக்குமுங்க.

(கல்யாணம்)





வெற்றியாளர் K Sivakumar என்ன கூறுகிறார்

அன்புள்ள ஐயா. 

என்னுடைய கவிதையை பரிசுக் கவிதையாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி கவுரவித்ததற்கு மிக்க நன்றி. 

சிறு வயது முதல் கண்ணதாசன் பாடல்களை விரும்பிக் கேட்பேன். 
பாடலின் எளிமையும் கருத்தாழமிக்கச் சொற்களும் என்னை வாலிப வயதில் மிகவும் ஈர்த்தன. 
அவ்வப்போது சிறு குறு கவிதைகள் எழுதி பாராட்டுக்கள் பெற்றுள்ளேன்.  

அன்று ஒருநாள் யதேச்சையாக வலைத்தளங்களில் கவிதைப் போட்டி பற்றி தேடும் போது தங்களின்  ஒரு சரணம். காம் வலைதளம் கண்ணில் பட்டது. என்னுடைய பாடல் எழுதும் பசிக்கு தீனி போடும் விதமான சுவையான கவிதைப் போட்டிகள் கண்டு இன்புற்றேன். 'அடடா, இதுநாள்  தெரியாமல் போச்சே' என்று எண்ணத் தோன்றியது. 

ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பரிசும் பெற்றேன்.மகிழ்ச்சி.
தொடர்ந்து பாடல் எழுதி மேலும் பல பரிசுகளைப் பெறுவேன் என நம்புகின்றேன். 

தங்களின் இந்த அரிய சேவை பல கவிஞர்களை  ஊக்குவித்து வெளியுலகற்கு அறிமுகப்படுத்தும் 
தளமாக அமைந்திருக்கிறது  கண்டு மிகவும் மகிழ்ச்சி. 

பணி தொடரட்டும்! 
பரிசு மழை பொழியட்டும்

நன்றி. 
கோ. சிவகுமார்