Winner Midhun Raj K
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
Midhun Raj K எழுதிய வரிகள்:
தாடிகள் எல்லாம் தாகூரா, மீசைகள் எல்லாம் பாரதியா?
பல்லவி
தாடிகள் வளர்த்தால் தாகூரர் ஆகுவாரோ?
மீசைகள் வைத்தால் பாரதியார் ஆகுவாரோ?
சரணம் 1 — (தாகூர்)
படுகொலை பார்த்தே பட்டம் துறந்தவன் இருக்க!
பதவிக்கென்றே படுகொலை புரிவோர் எங்கே?
பாமரன் உழைப்பில் பரமனைக் கண்டவன் இருக்க!
பரமனைப் பணத்திற்குப் பங்கிடுவோர் எங்கே?
சரணம் 2 — (பாரதி)
பேனாவால் போராட்டம் புரிந்தவன் இருக்க!
பட்டமும் பற்றும் அற்றவன் பதவியில் எங்கே?
புதுமையைப் புலன்களில் புகுத்தியவன் இருக்க!
பொய்வேடம் பூண்டு புகழ் பரப்புவோர் எங்கே?