சினிமாப் பாடலாசிரியர்கள் வரலாறு
இந்த இணையப் பக்கத்தில் சில சினிமாப் பாடலாசிரியர்கள் வரலாறு பற்றியும் அவர்கள் எழுதிய சில பாடல்கள் பற்றியும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். சில பாடல்களுக்கு வலையொளி இணைப்புகளும் அளித்துள்ளோம்.
உடுமலை நாராயணகவி
1899ஆம் ஆண்டில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூவிளைவாடி என்னும் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி(Udumalai Narayanakavi) . இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.
இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்தர். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.அக்காலத்தில் நாடகத் துறையில் புகழ்பெற்ற மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்த உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர், ஒரு முறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக் கண்டு அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடன் சென்ற உடுமலை நாராயணகவி முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன்சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார். யாப்பிலக்கணம் முழுதும் கற்றுணர்ந்தார். மதுரை நாடக மன்றங்கள் இவருக்கு உதவியாய் இருந்தது.
மதுரையில் வாழ்ந்த போது அங்கு நாடகங்கள் நடத்திய டி.கே.எஸ் நாடகக்குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ் கிருஷ்ணனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கலைவாணர் தொடர்பால் திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு கிடைத்தது.
நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுத வருமாறு இயக்குநர் ஏ.நாராயணன் சென்னைக்கு அழைத்தார். அதிலிருந்து திரைப்பாடல்கள் எழுதவும் நாராயணகவிராயர் தொடங்கினர்.
இவரது பாடல்கள் கருத்து மிக்கவையாகவும், அறியாமையில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இவரது பெருமையை போற்றும் விதமாக இந்திய அரசு தபால் துறையில் தபால் தலை வெளியிட்டுள்ளது. உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்
உடுமலை நாராயணகவி எழுதிய சில சிறப்பான பாடலைகள்:
அன்னியர்கள் நமை யாண்ட தந்தக் காலம்;
நம்மை நாமே ஆண்டு கொள்வ திந்தக் காலம்!
பேசுதற்கும் உரிமை யற்ற தந்தக் காலம்;
பிரச்சாரப் பெருமை யுற்ற திந்தக் காலம்!
மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்;
மடமை நீக்கிநம் உடமை கோருவது இந்தக் காலம்!
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே
அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி
மறைப்பதில் பயனுண்டோ - கையால்
மறைப்பதில் பயனுண்டோ - அதனால்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே.....
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம் அணி பெரும் ஓர் அங்கம்
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்(Pattukottai Kalyanasundaram) காலம் 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959 வரை. இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை என்னும் ஊரில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.
கலயாணசுந்தரனார் சிறு வயதிலிருந்தே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றினார்.
கலயாணசுந்தரனார் பல முத்திரை வரிகளை எழுதியுள்ளார். அவற்றில் வெகு சில வரிகள்:
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே
குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே!
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
உன்னக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன