variant-ligatures: normal; font-variant-alternates: normal; font-variant-numeric: normal; font-variant-east-asian: normal; font-variant-position: normal; vertical-align: baseline;">
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
தனக்கு நிகர் இல்லாத அறம் நிறைத்த சான்றோனாகிய இறையின் திருவடியைச் சேராதவர்க்கு மனத்தின் கண் நிகழும் துன்பங்களை மாற்றுதலும், பொருளாலும் இன்பத்தாலும் வரும் பற்று எனும் துன்பக் கடலை நீந்திக் கரையேறுதலும் அரிது.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
எண்குணம்(தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வினனாதல் , முற்றும் உணர்தல் , இயல்பாகவே பாசங்களின் நீங்குதல் , பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை) படைத்த இறையின் தாளைத் தலையினால் வணங்காதவர்களுக்குப் புலன்களை நுகர்ந்து வாழப் பொறிகளும், ஊழுக்கு உதவியாகும் கோள்களும் துணை புரிந்தும் பயன் இல்லை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனது திருவடியைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரை சேர்வர்; ஏனையோர் 'அதனுள் அழுந்துவர்
இறைவன் என்கிற முதலை உடையது உலகம். கற்றதன் பலன் அவனை வணங்குதல். மன, மொழி, செயல்களால் ஒழுக்க நெறியில் நின்றால் துன்பம் இன்றி இருவினை அண்டாது நீடு வாழலாம். அவனைச் சேராதோர் பொறிகளும் ஊழும் உதவினாலும், மனம், பிறவி மற்றும் உலகப் பற்றால் வரும் துன்பத்திலிருந்து விடுபடுதல் அரிது என்பதை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார். இறையை ஆதிபகவன், வாலறிவன், வேண்டுதல் வேண்டாமையிலான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், எண்குணத்தான் எனப் பல பெயர்களால் சுட்டி அழைத்து இறை இலக்கணம் கூறுகிறார்.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மழையினால் உயிர்கள் நிலைபெற்றுத் தொழில்கள் நடந்துவருதலால் அது அமிழ்தம் என்று கொள்ளலாம் .
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
தானே உணவாயும், உண்பதற்கு வேறு உணவுகளையும் உருவாக்கித்தருவது மழையே.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி « Previous Page 2 of 6 Next »
Copyright © 2026 R and R Consultant
Total Hits:362375