்டபங்களும்; பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் - கலைகளையும் அறிஞர்கள் ஆராயும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரெங்கும் இருந்தன.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்கள் இல்லை ; கல்வி முற்ற வல்லாரும் இல்லை- கல்வியில் முற்றும் வல்லவர்களும் அங்கு இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித் துறைகளில் வல்லவரும் இல்லாதவரும் இல்லை; எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே- எல்லோரும் எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை உடையார்களும் இல்லை-அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை உடையவர்களும் இல்லை. இந்தப் பாடலின் சிறப்பு ஒன்று இல்லாமையான் வருவது அதன் எதிர்மறை என்பதின் உண்மை கூறல்.
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
தாய் ஒக்கும் அன்பின் -அன்பு செலுத்துவதில் தாயை ஒப்பவனாவான்; தவம் ஒக்கும் நலம் பயப்பின் - நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவன்; சேய் ஒக்கும் - பெற்ற மகனை ஒத்திருப்பான்; முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்- கடைசிக் காலத்தில் மு
Copyright © 2026 R and R Consultant
Total Hits:358386