ம் கவிபாடும்" எனும் பழமொழியும், ‘கவிச்சக்ரவர்த்தி’ மற்றும் "கல்வியிற் பெரியோன் கம்பன்" என்ற பட்டங்களும் கம்பரின் கவித்திறமையைப் பறைசாற்றும்.
கம்பர் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் கற்றுத் தேர்ந்து சொல்வன்மை கொண்டவராக இருந்தர். அதையே பாரதி “கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” எனப் பாடியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், கம்பர் ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும், உவமான நயமும், சந்த ஞானமும் பெற்று, ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ (Kambar Kavithaigal) போன்ற சிறந்த நூல்களைப் படைத்தார். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த காவியமாகக் கருதப்படுகிறது.
தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. கம்பர் விருத்தம் பாடுவதில் மிகவும் வல்லவராகக் கருதப்பட்டார். அதையே பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் “விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன்” எனக் கூறியுள
Copyright © 2026 R and R Consultant
Total Hits:358269