எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

Kambar, the celebrated Tamil poet and author of the Ramayanam

கம்பர் வரலாறு

லை- கொடுமை இறப்புகள் நாட்டில் இல்லை; ஓர் குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்; சீற்றம் இல்லை- சினம் நாட்டில் இல்லை; தம் சிந்தையின் செம்மையால்- நாட்டு மக்களின் மனச் செம்மையால்; ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்- நல்ல அறச் செயல் செய்வதை தவிர வேறு செயல்கள் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை- மேன்மையைத் தவிர இழிவு அந்நாட்டில் இல்லை.
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.

யாதும் கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை- எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் இல்லை.
இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.
இடம் கொள் சாயல் கண்டு- பெண் மயில்களின் சாயலைப் பார்த்து; இளைஞர் சிந்தை போல்- இளைஞர் மனத்தைப் போல; தடம் கொள் சோலைவாய்- விசாலமான சோலையினிடத்தே; மலர் பெய்தாழ் குழல்- மலரணிந்த நீண்ட கூந்தலையும்; வடம் கொள் பூண் முலை- முத்து மாலைகளை அணிந்த தனங்களையும் உடைய; மடந்தை மாரொடு- பெண்களுடனே; தொடர்ந்து போவன- பின்தொடர்ந்து செல்வனவாம்; தோகை மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்களே.

அயோத்தி நகரின் மாட்சி

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர்ப் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன,

« Previous Page 4 of 18 Next »