அளவு இல் கோடியே.
வயிர நல்கால் மிசை- வயிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே; மரகதத் துலாம்- மரகதத்தாலாகிய உத்தரத்தை; செயிர் அறப் போதிகை கிடத்தி- குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது கிடத்தி; சித்தரம் உயிர் பெறக் குயிற்றிய- ஓவியங்கள் உயிருள்ளன போலத் தோன்றுமாறு செய்து; உம்பர் நாட்டவர் அயிர் உற
இமைப்பன - தேவகள் விமானமோ என ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள்; அளவில் கோடியே- அளவற்ற கோடிக் கணக்கானவை.
தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.
தணிமலர்த் திருமகள் - குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி; தங்கும் மாளிகை- தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள்; இணர் ஒளிபரப்பி நின்று- மிக்க ஒளி வீசி நின்று; இருள் துரப்பன-இருளை ஓட்டுபவை; திணிசுடர் நெய்யுடைத் தீவிளக்கமோ- செறிந்த ஒளியுடைய நெய்விளக்குகளின் விளக்கமோ; மணிவிளக்கல்ல-
மணிகளின் ஒளியோ அல்ல; மகளிர் மேனியே- அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் - சிற்றரசர்கள் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும்; அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் - அன்னம் போன்ற நடையையுடைய மாதர்கள் ஆடும் மண்டபங்களும்; உன்னரும் அருமறை ஓதும் மண்டபம் - அருமறை ஓதும் ம
Copyright © 2026 R and R Consultant
Total Hits:358413