எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

Kambar, the celebrated Tamil poet and author of the Ramayanam

கம்பர் வரலாறு

ன்னே நின்று இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால்; நோய் ஒக்கும் என்னின் - குடிமக்களுக்கு நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவன்; நுணங்கு கேள்வி ஆயப்புகுந்தால்- நுணுக்கமான கலைத்துறைகளை ஆராயப்புகுந்தால் ; அறிவு ஒக்கும்- நுண் அறிவினை ஒத்திருப்பான்; எவர்க்கும் அன்னான் - எவர்க்குமான மன்னன்.

தசரதன் புத்திரன் வேண்டிச் செய்த வேள்வியில் பூதம் சோற்றுப் பிண்டத்துடன் எழுதல்:
ஆயிடை கனலின்நின்று அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது, ஏந்தியே.
ஆயிடை கனலின் நின்று - அப்போது அந்த வேள்வித்
தீயிலிருந்து; அம்பொன் தட்டம் மீத் - அழகிய ஒரு பொன்
தட்டத்தின் மேலே; தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான
அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் - தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; ஏயென பூதம் ஒன்று - ஏயென்று
ஒரு பூதமானது; எழுந்தது ஏந்தியே- தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.

கோசலை இராமனைப் பெறுதல்

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை.

ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து-பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அருமறைக்கு உணர்வ

« Previous Page 7 of 18 Next »